போதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை

போதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை-Not Received any Cocaine Using MP List

போதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எதனையும்  இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  இதுவரை தனக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றைய தினத்திற்கான பணிகளின் போது  அறிவிப்பொன்றை வெளியிட்ட சபாநாயகர் இதனை அறிவித்தார்.

கெக்கேயின் பயன்படுத்தும் எம்.பிகள் 24 பேர் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.

இது தொடர்பில் நேற்று (20) பாராளுமன்றத்தில் எம்.பி.கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பான, ரஞ்சன் ராமநாயக்கவினால் எம்.பிக்களின் பெயர் பட்டியல் எதுவும் முன்வைக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

Thu, 02/21/2019 - 16:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை