பருவநிலை மாற்றத்தால் அழிந்துவிட்ட எலியினம்

அவுஸ்திரேலியாவின் பவளப்பாறைகளில் வாழ்ந்த எலியினம் ஒன்று முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தால் அழிந்துவிட்ட முதல் பாலூட்டி விலங்கினம் பிரம்பிள் கே மெலோமிஸ் எனும் எலி வகையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பவளப்பாறைகளின் மத்தியில் உள்ள பிரம்பிள் கே என்ற சிறிய தீவில் மட்டுமே வாழ்ந்ததாக நம்பப்படும் அந்த எலியினத்தைக் கடந்த 10 ஆண்டுகளாகக் காணவில்லை.

தாழ்வான நிலப்பகுதியைக் கொண்ட தீவு, கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டு, உயிரினம் அழிந்துபோயிருக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

2014இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த உயிரினம் வாழும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

அழிந்துவிட்ட உயிரினங்கள் பற்றிய உத்தியோகபூர்வ பட்டியலில் எலியை அவுஸ்திரேலியச் சுற்றுச்சூழல் அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை பதிவுசெய்தது.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை