அட்டாளைச்சேனையில் திறந்த பல்கலைக்கழக கிளை

திறக்குமாறு கோரிக்கை

திறந்த பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழிப் பிரிவுக் கிளையொன்றினை அட்டளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில்  திறக்குமாறு அம்பாறை மாவட்ட மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இப் பல்கலைக் கழகத்தினை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வளாகத்தில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி உடனடியாகவே ஆரம்பிக்க முடியுமென கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.பழீல் பீஏ நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் கடந்த வாரம் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார். 

1941ல் இலங்கை ஆசிரியர் (ஆண்கள்) கலாசாலையாக ஆரம்பிக்கப்பட்ட 'அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை' கடந்த 77வருடங்களாக சுமார் 12,500க்கு மேற்பட்ட ஆசிரியர்களை பயிற்றுவித்துள்ளது.

1995இல் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் அதே இடத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு பின்பு, ஒலுவிலுக்கு இடமாற்றப்பட்டது.

(பாலமுனை நிருபர்) 

Wed, 02/13/2019 - 13:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை