பிரபல முத்த புகைப்படத்தில் இருக்கும் மாலுமி மரணம்

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கொண்டாட்டத்தின்போது நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் அறிமுகமில்லாத பெண் ஒருவருக்கு முத்தமிட்ட பிரபல புகைப்படத்தில் இருக்கும் அமெரிக்க மாலுமி தனது 95 வயதில் மரணமடைந்தார். ஜோர்ஸ் மெண்டொன்சா என்ற இளைஞன் 21 வயது கிரேட்டா சிம்மர் என்ற யுவதியை முத்தமிடும் அந்த புகைப்படம் அதிகம் பிரபலம் பெற்றது.

அல்பிரேட் எயிஸ்டட் எடுத்த அந்த புகைப்படம் லைப் சஞ்சிகையில் வெளியானது. புகைப்படத்தில் இருக்கும் கிரேட்டா சிம்மர் 2016 ஆம் ஆண்டு தனது 92 வயதில் மரணமடைந்தார். இந்நிலையில் திடீர் நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோட் தீவின், மிட்டில் டவுனில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் வைத்து உயிரிழந்ததாக மெண்டொன்சாவின் மகள் குறிப்பிட்டுள்ளார்.

1945 ஆம் அண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி வீதியில் நடந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அருகில் சென்ற யுவதியை இழுத்துப் பிடித்து முத்தமிட்டதாக அந்த புகைப்படத்தை எடுத்த எயிஸ்டட் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னரே அடையாளம் காணப்பட்டனர்.

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை