பாராளுமன்ற அமர்வு நாளை

தேசிய அரசுபற்றி விவாத முடிவில்லை

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் பிற்போட்டிருந்த நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது.  

ஏற்றுமதி அதிகாரசபைச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதமே நாளையதினம் நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை தொடர்பான முழுநாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.  அரசியலமைப்பு பேரவையினால் உயர் பதவிகளுக்கு மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இது தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.

இதற்கமைய நாளைய தினம் விவாதத்தை நடத்த அரசாங்கம் இணங்கியுள்ளது.   அதேநேரம், தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனைகள் இவ்வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. 

(நமது நிருபர்)

Tue, 02/19/2019 - 10:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை