திரவ வாயு மின் உற்பத்தி நிலையம் மின் கட்டணம் குறைய வாய்ப்பு

300 மெகா ​வோட் திரவ இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தை 16 மாத காலத்திற்குள் செயற்படுத்த முடிந்தால், மின் கட்டணத்தை 5 முதல் 10 வீதத்தினால் குறைக்க முடியுமென மின்சக்தி, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இதனைத் துரிதமாக நிர்மாணிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

35 மொகாவோட் மின் உற்பத்தி செய்யும் புரோட்லண்ட் மின் உற்பத்தி நிலைய திட்டத்தினால் வீடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்ற வேளையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

​வோர்ட் திரவ இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலைய பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். இதனூடாகத் தேவையற்ற கட்டணங்களைக் குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும். இவ்வளவு காலமும் இந்தத் திட்டம் ஏன் காலதாமதமானதென்பது சிக்கலுக்குரிய விடயமாகும். இந்தத் திட்டத்திற்கு இடையூறு செய்யாமல் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

புரோட்லண்ட் திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு ஏப்ரல் மாதமளவில் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இந்த திட்டம் தாமதமாவதால் பாவனையாளர்களுக்கே நஷ்டம் ஏற்படும். இந்தத் திட்டத்தினூடாக 35 மொகவோட் மின்சாரத்தைப் பெற்றுத் தேசிய உட்கட்டமைப் புடன் இணைத்தால் அவசர மின்கொள்வனவு அவசியமாகாது. பாவனையாளர்களுக்குப் பாதகமான திட்டங்கள் முன்னெடுக்கப்படாது. எந்த வித மின் துண்டிப்போ வீண்விரயமோ, மோசடியோ இன்றி மக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.                  

(ஷம்ஸ் பாஹிம்)

Wed, 02/27/2019 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை