தேசிய அரசாங்கம் அமைப்பு யோசனை அடுத்த வாரம் பாராளுமன்றில்

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான யோசனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.இந்நிலையில் பழைய முறையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும் அவர் குறிப்பிடடார்.   

கண்டியில் யட்டிநுவர தேர்தல் தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காபட் வீதியை நேற்று (17) மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறியதாவது,.  

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரின் பின்னர் நடைபெறவுள்ள விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான யோசனை குறித்து கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்படும். அதைதொடர்ந்து அவ் வாரத்திற்குள் அந்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.  

மாகாண சபை தேர்தல் பற்றி பலரும் பேசி வருகின்றனர். ஐ.தே.கவே முதன் முதலாக இது பற்றிப் பேசியது. ஆனால் ஸ்ரீல.சு.க. புதிய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக்கூறி எல்லை நிர்ணயம் தொடர்பான சட்டத்தில் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றியது. இதன் காரணமாக புதிய முறையில் அதனை நடாத்த முடியாதுள்ளது.  

எமக்கு தேர்தலை ஒத்திப்போட எந்த தேவையும் கிடையாது.ஆனால் நாம் கூறும் விதத்தில் தேர்தலை நடத்த முன் வந்திருந்தால் தேர்தல் முடிந்து ஒரு வருடமும் கழிந்திருக்கும்.  

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசியபோது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எந்த முறையில் நடத்துவது என்பதில் முடிவு செய்வோம் என பிரதமர் எனக்கு தெரிவித்தார்.   

(எம்.ஏ.அமீனுல்லா) 

Mon, 02/18/2019 - 14:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை