திருட்டு மின்சாரம் பெற்ற இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் திருட்டு மின்சாரம் பெற்ற இருவரை   28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க  நேற்றுமுன்தினம்(25) உத்தரவிட்டார். 

கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஆண் ஒருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   சந்தேக நபர்கள்  திருட்டு மின்சாரத்தினை பெற்றிருந்த நிலையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

(கந்தளாய் தினகரன் நிருபர்)

Wed, 02/27/2019 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை