ரஷ்ய நகரங்களில் பனிக்கரடிகள் ஆக்கிரமிப்பு

ரஷ்ய ஆர்டிக் பிராந்திய நகருக்குள் பனிக் கரடிகள் புகுந்ததால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு மக்கள் வெளியே வருவதற்கு பயந்து வருகின்றனர்.

தொலைதூர நொவ்யாக செம்பலியா தீவுப் பகுதியில் ஆக்ரோஷமான கரடிகள் வீடுகள் மற்றும் பொதுக் கட்டிடங்களுக்குள் நுழைந்துள்ளன. இந்த பிராந்தியத்தில் சுமார் 3,000 பேர் வசித்து வருகின்றனர். பனிக் கரடிகளின் பாரிய படையெடுப்பு ஒன்று பற்றி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த தீவுப் பகுதியின் பிரதான குடியிருப்பு பகுதிக்குள் கடந்த டிசம்பர் தொடக்கம் 52 பனிக் கரடிகளின் ஊடுருவல் வழக்கமாகியுள்ளது. இவைகளில் சில ஆக்ரோஷமான நடத்தையை வெளிக்காட்டி வருகின்றன. மக்கள் வெளியேறுவதற்கு பயப்படுவதால் நாளாந்த வாழ்வு பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரடிகளை விரட்டுவதற்கான நடவடிக்கையை நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பகுதிகளில் பனி உருகிவரும் நிலையில் பனிக்கரடிகள் உணவுக்காக இவ்வாறு நகரங்களை ஆக்கிரமித்து வருவதாக கூறப்படுகிறது.

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை