பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீபுக்கு பிரதமர் பாராட்டு

போதைப்பொருள் குற்றச்செயல்களை ஒழிப்பதில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டியிருக்கின்றார். அதிரடிப்படை யின் கட்டளை அதிகாரியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீபுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்தப் பாராட்டினை பிரதமர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்களை ஒழித்துக்கட்டுவதன் பொருட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில், போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் விசேட அதிரடிப்படையினர் ஈட்டிய வெற்றியானது நாட்டுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது. இது பாராட்டத்தக்கதாகும்.

இதன்போது விசேட அதிரடிப்படையினரின் தைரியமான செயற்பாட்டினை நான் மெச்சுகின்றேன். அதேசமயம் இவ்வாறான செயற்திறன்மிக்க அதிகாரிகள் இருப்பது பொலிஸ் திணைக்களத்துக்குக் கிடைத்திருக்கும் சொத்தாகவே நான் காண்கின்றேன்.

சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைக்கு ஒத்துழைத்த அனைத்து விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என பிரதமர் அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

 எம். ஏ. எம். நிலாம்

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை