அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதிக்கு சீனா ஒப்புதல்

அமெரிக்கா உற்பத்தி செய்யும் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வொஷிங்டனில் 2 நாட்களாக நடந்தது. இதில் அமெரிக்காவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அறிவுசார் சொத்துகளை அமெரிக்காவுடன் சேர்ந்து பாதுகாக்கவும் சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக பீஜிங்கில் உள்ள அரசு செய்தி ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், ஆற்றல் மிகுந்த பொருட்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா உடனான வர்த்தகம் சீராக முன்னேற பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன வர்த்தக துறை தெரிவித்துள்ளது.     

Mon, 02/04/2019 - 12:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை