போதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு அதிகாரி

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம். ஆர். லத்தீப்

விசேட அதிரடி படையினரின் கட்டளை அதிகாரியும் இலங்கையின் குற்றங்கள் தொடர்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான எம். ஆர். லத்தீப் தனது 40வருட கால ​சேவையை பூர்த்தி செய்து சேவை நீடிப்பை கேட்காமலே தனது பதவியிலிருந்து கடந்த 04ந் திகதி அமைதியாக ஓய்வுபெற்றார். இதனை அறிந்த ஜனாதிபதி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்பித்து அவருக்கு இன்னும் ஒரு வருட கால பதவி நீடிப்பை வழங்கியுள்ளார்.

இந்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடல் குற்றங்களை தடுக்க பாரிய நடவடிக்கை எடுத்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப் கடந்த காலங்களில் மேற்கொண்ட சுற்றுவளைப்புகளால் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பெருமளவு தகர்க்கப்பட்டது.

2016ம் ஆண்டில் இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் சவாலை எதிர்கொள்ள அப்போதைய சட்டம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சரான சாகல ரத்நாயக்காவால் அவ்வருட அதிரடிப்படை நினைவு நாள் கூட்டத்திலேயே லத்தீபுக்கு அப்பதவியை வழங்கினார்.

அந்த சவாலை  எந்தவொரு தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப் விஷேட அதிரடிப்படையினை ஈடுபடுத்த நாடுபூராவும் சுற்றிவளைப்புக்களை போதைப் பொருள் கடத்துவோருக்கு எதிராக மேற்கொண்டார். அவ்வேளையில் பாதாள மற்றும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவை அமைத்து ஜனாதிபதி அதனை எம். ஆர். லத்தீப்புக்கு  ஒப்படைத்தார்.

அதன் கீழ் நாடுபூராவும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குற்றங்களைப் புரியும் குற்றவாளிகள் அதிகமானோர் கைது செய்யபபட்டார்கள். அந்த திட்டமிட்ட குற்றங்களுக்கு தலைமைதாங்கி துபாய் நாட்டிலிருந்து இயங்கிய தற்போது கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துரே மதுஷால் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து செய்மதி தொலைபேசி ஊடாக மாதத்திற்கு 5000 செய்திகள் பரிமாறியுள்ளார். இதனை கண்டுபிடித்தது லத்தீபின் கீழ் இயங்கிய விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவாகும்.

Thu, 02/07/2019 - 11:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை