நிதி பரிமாற்ற நிறுவன தலைவரின் மரணத்தால் பெரும் பணம் மாயம்

பிட்கொய்ன் உட்பட பல்வேறு நிதிப் பரிமாற்ற சேவை வழங்கும் மையத்தின் தலைவர் திடீரென மரணமடைந்ததால் அவரிடம் முதலீடு செய்திருந்த பலர் பணத்தை திரும்பப் பெற முடியால் தவித்து வருகின்றனர். அந்த நிறுவனத்தின் மூலம் வைப்புச் செய்யப்பட்டிருந்த 14.5 கோடி டொலர் பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

கனடாவில் உள்ள வான்கூவர் நகரைச் சேர்ந்த இளைஞர் ஜெரால்ட் கோட்டன் (30) டிஜிட்டல் கரன்சி அல்லது மெய்நிகர் பணம் என அழைக்கப்படும் பிட்கொய்ன் உள்பட பல்வேறு நிதி பரிமாற்ற சேவைகள் வழங்கும் மையத்தினை நடத்தி வந்தார். அவரது மையத்தில், சுமார் 3,63,000 பேர் பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே, கடந்த டிசம்பரில் இந்தியாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்திருந்த ஜெரால்ட் கோட்டன் திடீரென்று மரணமடைந்தார். அவர், ஏற்கனவே குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது மரணத்தால் அவரது நிதி பரிமாற்ற சேவை மையம் முடங்கியுள்ளது. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை ஜெரால்ட் கோட்டன் தனது மடிக்கணனியில் பராமரித்து வந்தார்.

அந்த மடிக்கணனியின் கடவு வார்த்தை யாருக்கும் தெரியவில்லை. அந்த வார்த்தையை அவர் யாருக்கும் கூறவில்லை. இந்நிலையில், அவரது நிறுவனத்தில் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்திருந்த தொகை என்ன ஆனது என்று தெரியவில்லை.

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை