'பாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்'

ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பாடசாலை மாணவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர் மூவருடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

பாடசாலை ஆசிரியர்களினால் வழங்கப்படும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்காக, கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுகளும் உரிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்கள் மீதான உடல் சார்ந்த துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பில், 1907ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டு வருகின்றபோதிலும்,  தற்போதும் பாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

Tue, 02/26/2019 - 17:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை