மாத்தறையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்டம்

மாத்தறை சென் தோமஸ் கல்லூரியின் 165 ஆவது ஆண்டு நிறைவையொடடி ‘தோமியன் நாங்கள்’ உயன்வத்த பழைய மாணவர் சங்கம் Thomian’7s என்னும் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அணிக்கு 7 பேர் கலந்துகொள்ளும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்போட்டிகள் நேற்று (15) மாத்தறை உயன்வத்த விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதன் இறுதி நாளாகும்.

மாத்தறை சென். தோமஸ், மாத்தறை சென் சர்வேசஸ், மாத்தறை ராகுல, காலி ரிச்மண்ட், காலி மகிந்த, காலி வித்யாலோக்க, காலி சாந்த அலோசியஸ், மொறட்டுவ சென் செபஸ்தியன், கண்டி சில்வெஸ்டர், கொழும்பு லும்பினி, பன்னிப்பிட்டிய தர்மபால, அம்பலங்கொட தர்மாசோக்க ஆகிய 12 பாடசாலைகள் தகுதிபெற்றுள்ளன.

இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக ‘தோமியன் நாங்கள் உயன்வத்த’ அமைப்பின் ஏற்பாட்டு செயலாளர் சிசிர வீரசிங்க கூறினார்.

போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கும் இரண்டாம் இடம்பெறும் அணிக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்படும். சிறந்த ஒழுக்கமான அணிக்கும் பரிசுகள் வழங்கப்படுவதோடு அனைத்து அணிகளுக்கும் காற்பந்தாட்ட பந்துகளும் வழங்கப்படவுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று 15 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பாடசாலை பழைய மாணவர் பிரையன் ரணசிங்க, பாடசாலை அதிபர் டபிள்யூ. பீ. பியதிஸ்ஸ ஆகியோரின் பங்களிப்புடன் காற்பந்தாட்ட மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டி தொடர்பான விளக்கங்களை அளிக்கும் ஊடக சந்திப்பொன்று 09 ஆம் திகதி மாலை உயன்வத்த நவலோக்க விளையாட்டு மைதான மண்டபத்தில் நடைபெற்றதோடு அந் நிகழ்வில் மாத்தறை பிரதி மேயர் சத்துர கருணாரத்ன, ‘தோமியன் நாங்கள் உயன்வத்த’ அமைப்பின் தலைவர் ஜயன்த ஜயசிங்க கருணாரத்ன, செயலாளர் ஹரேந்திர கருணாரத்ன, அமைப்பின் ஏற்பாட்டு செயலாளர் சிசிர வீரசிங்க, டொக்டர் லக்மால் ரணசிங்க, சுரேஷ் விக்ரமநாயக்க ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை