தேசிய அரசு அமைக்கும் யோசனை; அடுத்த அமர்வு வரை ஒத்திவைப்பு

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை நேற்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பின்போடப்பட்டது. அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதை சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கமைய நேற்று (07) தேசிய அரசாங்கம் உருவாக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சபை முதல்வர்,

கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களை நாம் பிரதமருக்கு அறிவித்தோம்.அவற்றை செவிமடுத்த பிரதமர் இம்முறை இதனை முன்வைக்காது அடுத்த அமர்வில் முன்வைக்குமாறு அறிவித்தார். அதன் படி இன்று (நேற்று) பிரேரணை விவாதிக்கப்படாது என்று கூறினார்.

முன்னதாக இது தொடர்பில் கேள்வி எழுப்பிய தினேஷ் குணவர்தன எம்.பி, கட்சித் தலைவர் கூட்டத்தில் எமது தரப்பு மற்றும் ஜே.வி.பி,த மிழ் தேசிய கூட்டமைப்பு என்பன தேசிய அரசை உருவாக்குவதற்கான யோசனையை முன்வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றை பொருட்படுத்தாது நிலையியற் கட்டளையை நிறுத்தி, இந்த யோசனையை முன்வைப்பதாக சபை முதல்வர் அறிவித்திருந்தார். நான் காலையில் சபாநாயகருடன் தொலைபேசியில் பேசிய போது விவாதத்தை பிற்போட்டுள்ளதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

விமல் வீரவன்ச எம்.பி

ஏனைய கட்சிகள் எதிர்த்தும் தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதில் சபை முதல்வர் உறுதியாக இருந்தார். அடுத்த அமர்வில் விவாதிக்குமாறு நாம் கோரியிருந்தோம். எமது தரப்பு எம்.பிக்களின் ஆதரவை பெற முடியாததால் விவாதம் பின்போடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்கள் உள்ள ஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கம்

ஒன்றை நிறுவும் யோசனையின் பிரேரணையை சபை முதல்வர் கடந்தவாரம் சபாநாயகருக்கு கையளித்திருந்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை