சாகோஸ் தீவுகளை கைவிட பிரிட்டனுக்கு ஐ.நா தீர்ப்பு

இந்திய பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுகள் மீதான கட்டுப்பாட்டை பிரிட்டன் கூடிய விரைவில் கைவிடும்படி ஐ.நா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1965 ஆம் ஆண்டு மொரிசியஸின் சுதந்திரத்திற்காக இந்த தீவுகள் பிரிட்டனின் கடல் கடந்த பிரதேசமாக ஏற்கப்பட்ட நிலையில் 1968 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற மொரிசியஸ், அந்த தீவுகளை வலுக்கட்டாயமாக விட்டுக்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனின் முன்னாள் காலனி நாடான மொரிசியஸில் இருந்து இந்த தீவுகள் சட்டரீதியில் பிரிக்கப்படவில்லை என்று நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது ஒரு அறிவுரை கருத்து என்றும் தீர்ப்பு இல்லை என்றும் பிரிட்டன் வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு சட்ட ரீதியான கடப்பாடு இல்லை என்றும் அது கூறியது.

பாதுகாப்புக்கான தேவைகள் இல்லாத போது அந்த தீவுகளை மொரிசியஸிடம் மீண்டும் கையளிப்பதாக பிரிட்டன் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த தீவுகளில் மிகப்பெரியதான டியேகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைப்பதாற்காக அங்கிருந்த மொத்த மக்கள் தொகையையும் வெளியேற்றிமை குறிப்பிடத்தக்கதாகும்.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை