உலக வங்கி தலைவர் பதவி: மல்பாஸின் பெயர் பரிந்துரை

உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி டேவிட் மல்பாஸ் பெயரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

உலக வங்கி தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் கடந்த 1ஆம் திகதியுடன் பதவி விலகினார். முன்னதாக இந்த பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா பெயர் பரிந்துரைக்கப்படலாம் என தகவல் வெளியானது. அதை வெள்ளை மாளிகை மறுத்த நிலையில், மல்பாஸ் பெயரை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

சர்வதேச நிதி விவகாரத்தில் உலக வங்கியின் பங்கை மேலும் சிறியதாகவும், குறிப்பானதாகவும் மாற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் மல்பாஸ். இதேபோன்று சீனா உலக வங்கியின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருப்பது குறித்தும், அந்நாட்டின் திட்டங்கள் குறித்தும் டேவிட் மல்பாஸ் கடுமையாக விமர்சித்து வருபவர். எனவே, உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரை டிரம்ப் பரிந்துரைத்துள்ளது சர்ச்சைக்குரியதாக மாற வாய்ப்பு உள்ளது.

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை