பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் இலவச அஞ்சல் வசதித் தொகை அதிகரிப்பு

AMF

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான முத்திரைப் பெறுமதி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதி ஒதுக்கீடு ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமான அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.

பெப்ரவரி 15 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமான பத்திரத்தில்அஞ்சல் அலுவலகக் கட்டளைச் சட்டத்தின் (190ஆவது அத்தியாயம்) 8(1) (டீ) ஆம் பிரிவின் கீழ் அஞ்சல் சேவைகள்மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சரால்இதற்கான கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான முத்திரைப் பெறுமதியை அதிகரிப்பதற்கும், மாகாண சபை உறுபபினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் 2018.01.16ஆந்திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கிகரிக்கப் பட்டுள்ளது.

இதற்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வருடத்துக்கு வழங்கப் பட்டுள்ள இலவச அஞ்சல் வசதி ரூ. 1,75,000வரையறை ரூ. 3,50,000ஆகவும்மாகாண சபை உறுப்பினர்களுடைய இலவச அஞ்சல் வசதிக்காக ஒரு வருடத்துக்கு வழங்கப்பட்டுள்ள ரூ. 24,000வரையறை ரூ. 48,000ஆகவும் வழங்கப்படவுள்ளது.

இந்த வர்த்தமான அறிவித்தல் மூலம் 2018.01.16ஆந் திகதி தொடக்கம் இது நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

Sun, 02/17/2019 - 11:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை