சாபி இல்லம் சம்பியனாக தெரிவு

வரிப்பத்தான்சேணை அல்- – அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு அண்மையில் பாடசாலை அதிபர் எஸ்.எல்.கலந்தர் லெவ்வை தலைமையில் வரிப்பத்தான்சேணை அஸ்ரப் ஞாபகார்த்த பொது மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவருமான எம்.ஐ. மன்சூர் கலந்து கொண்டார்.

இவ் விளையாட்டுப் போட்டியில் சாபி(பச்சை) ,ஹம்பல்(மஞ்சள்),ஹனபி((நீலம்) என மூன்று இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு மிகவும் சிறப்பானமுறையில் இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை இப் பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியையான திருமதி எப்.ஆர்.எம்.சிறாஜுன் நெறிப்படுத்தியிருந்தார்.

இந்த போட்டி நிகழ்வில் உடற்பயிற்சியின் முதலாம் இடத்தினை ஹம்மல் இல்லமும் அணிநடையின் முதலாம்இடத்தை சாபி இல்லமும் இல்லங்கள் அமைத்தற்காக முதலாம் இடத்தை ஹனபி இல்மும் பெற்றுக் கொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டியின் 2019 நடப்புவருடத்துக்கான சம்பியனாக 211 புள்ளிகளைப் பெற்று சம்பியனாக சாபி இல்லம் தெரிவுசெய்யப்பட்டது. இரண்டாம் இடத்தினை 189 புள்ளிகளைப் பெற்று ஹனபி இல்லமும் மூன்றாம் இடத்தினை168 புள்ளிகளைப் பெற்று ஹம்மல் இல்லமும் தெரிவு செய்யப்பட்டது.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் ,வெற்றிபெற்ற இல்லத்துக்குமான வெற்றிக்கேடயத்தினை பிரதம அதிதியால் இல்ல ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர்களான என்.எம்.ஆசிக்,எம்.ஐ.எம்.நைசர்,எஸ்.ஏ.அன்வர்,எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் ,ரீ.றபாயுதீன் ,பாடசாலை அதிபர்கள் கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல் மகுமூதுலெவ்வை உட்பட பலர்கலந்து கொண்டனர்.

(ஹிங்குறாணை குறூப் நிருபர்)

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை