ஏலத்தில் விற்று வங்கிக் கடனை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

பான் ஏசியா வங்கியில் இருந்து பெற்ற ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் கடனை மீளச் செலுத்தாவிட்டால், முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் சொத்துக்களை திறந்த ஏலத்தில் விற்று குறித்த பணத்தை பெறுமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டுள்ளது.

அடமானம் ஒன்றிறிற்காகவே தான் கையொப்பமிடுவதாகத் தெரியாமல் கையொப்பமிட்டதாக பந்துல குணவர்தன கூறினாலும் பிரபலமான டியூசன் வகுப்பு ஆசிரியரான அவர், இது பற்றி அறியாதிருந்ததை ஏற்க முடியாதென அறிவித்த வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி அஹ்சன் மரிக்கார், அவரின் சொத்துக்களை விற்று உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு வங்கி நிர்வாகத்தினருக்குத் தீர்ப்பு வழங்கினார்.

பான் ஏசியா வங்கியிடம் பல தடவைகள் பெற்ற 120 இலட்சம் ரூபா பணம் மற்றும் வட்டி என்பவற்றை மீளப் பெறுவதற்காக, மகரகம அல்பா டிஜிட்டல் தனியார் நிறுவனம் மற்றும் பந்துல குணவர்தன எம்.பி ஆகியோருக்கு எதிராக பான் ஏசியா வங்கி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

குறித்த பணத்தை மீளச் செலுத்த அல்பா நிறுவனம் தவறியிருந்தது.இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியான பந்துல குணவர்தன இந்தக் கடனைப் பெறுவதற்காக தமது நுகேகொடவிலுள்ள சொத்தை பிணையாக வைத்திருந்ததாக மனுதாரர் நிறுவனம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

பெற்ற கடனைச் செலுத்தாவிட்டால் குறித்த சொத்தை திறந்த ஏலத்தில் விற்பதற்கு மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அனுமதி கோரப் பட்டிருந்தது.

ஆனால், வங்கியில் கடன்  பெறுவதற்கான உத்தரவாதமாகவே, தான் கைச்சாத்திட்டதா கவும், அடமானம் பெற கையொப்பமிடவில் லை எனவும் பந்துல குணவர்தன நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால், அவரின் கூற்றை நிராகரித்த நீதிமன்றம், அவரின் சொத்தை விற்று குறித்த பணத்தை மீளப்பெறுமாறு உத்தரவிட்டது.

(பா)

 

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை