'தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தி சமத்துவத்தைப் பேண வேண்டும்'

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாதுள்ளதால், சமூக சமத்துவம் சிதைக்கப்படுவதாகவும், வாக்குரிமைகள் மூலமே சமூக சமத்துவத்தை பாதுகாக்க முடியுமென்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.  

சமூக சமத்துவ சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கு முகமாக காலி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், சமூக சமத்துவம் தொடர்பான சர்வதேச தினம் தேர்தல் ஆணைக்குழு மூலம் அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினத்தில் சமூக சமத்துவத்தை பாதுகாப்பது முக்கியமானதாக உள்ளது.

ஜனநாயகம், சமத்துவம் மற்றும் பங்குபற்றல் ஆகியவற்றிற்கு விஷேட முக்கியத்துவம் வழங்குவது முக்கியமாகும். வாக்குரிமையே இதனை உறுதிப்படுத்துகிறது.

உரிய நேரத்தில் உரிய முறையில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தாதிருந்தல், எல்லோரும் பங்குகொள்ளும் வகையில் தேர்தலை நடத்தாதிருத்தல்,ஒரு பிரிவினரை நீக்கி விட்டு தேர்தலை நடாத்துதல், என்பவை சமூகம் சமத்துவமற்றுச் செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. சர்வஜன வாக்குரிமையை மேலும் பலப்படுத்துவது பற்றியே சமூக சமத்துவ தினத்தில் நாம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(வெலிகம தினகரன் நிருபர்) 

 
Tue, 02/26/2019 - 13:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை