ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்

பிரிட்டன் உட்பட நான்கு நாடுகள் இணைந்து முடிவு

ஜெனீவாவில் இம்மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை கையாளும் முக்கிய நாடுகள், இலங்கை பற்றிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் மூன்று தீர்மானங்களையும் நான்கு நாடுகளின் இணைந்த தீர்மான மொன்றையும் சமர்ப்பிக்க உள்ளதாக ஜெனிவாவுக்கான பிரிட்டிஷ் தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான தீர்மானத்தை கனடா, ஜெர்மனி, மசெடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக சமர்பிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான பிரிட்டனின் நிரந்தர பிரதிநிதி, ஜூலியன் பிரைத்வெய்ட் தெரிவித்தார். இலங்கையுடன் மீண்டும் இணைந்து செயற் படவும் 2015ல் ஆரம்பமான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணவும், மனித உரிமை பேரவை யில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வும் முயற்சிக்குமென இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கையாள ஐ.நா.நியமித்த குழு,தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள பிரிட்டன்,மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானத்துக்கு முழுமையான ஆதரவை பெறுவதற்கு முயற்சிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளதால் இலங்கை விவகாரத்தை கையாளும் பொறுப்பை பிரிட்டன் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை