கொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு

தொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

78 வயதான சாமுவேல் லிடில் என்ற அந்தக் கொலையாளி கடந்த மூன்று தசாப்தங்களில் 90 பேரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். வேறு கொலைகளுக்காக அவர் ஏற்கனவே மூன்று ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகிறார்.

1975 தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்கா எங்கும் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கொலையாளி கவனிப்பாரற்ற மற்றும் ஒதுக்கப்பட்ட பெண்களை இலக்கு வைத்திருப்பதால் அந்த கொலைகள் பெரிதாக விசாரணைகள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. அவரது வாக்குமூலங்களின்படி அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தொடர் கொலையாளியாக சாமுவேல் லிடில் கருதப்படுகிறார்.

முன்னாள் குத்துச்சண்டை வீரரான லிடில், குத்துவிட்டும், கழுத்தை நெரித்தும் கொலைகளில் ஈடுபட்டுள்ளார். லிட்டில் வரைந்திருக்கும் உருவப்படங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அடையாளம் காண உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை