மாகாண சபைகளினது பதவிக்காலம் முடிந்ததும் ஒரே தினத்தில் தேர்தல்

எல்லா மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் ஒரே தினத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது மக்களின் ஆணை கிடைத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.  

காலி மாவட்ட ஐ.தே. கட்சி மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்  உரையாற்றுகையில், மாகாண சபை தேர்தல் மிக விரைவில் இடம்பெறும். 52 நாட்கள் ஆட்சி மாற்றத்தின்போது காலி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவர் பியஸேன கமகே மற்றும் மனுச நாணயக்கார ஆகிய இருவரும் ஐ.தே. கட்சியில் இணைந்து கொண்டனர். இதற்காக நாம் ஐ.தே. கட்சி அமைச்சர்கள் நாள்வரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலை முன்னெடுக்க உள்ளோம்.  

1978ம் ஆண்டு அரசியல் யாப்புக்கு மேலதிகமாக 19ஆவது சீர்த்திருத்தம் சத்தி பெற்றது. எதிர்வரும் சிங்கள,  தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலுக்கு நாம் ஆயத்தமாக வேண்டியுள்ளது.  

4  1/2 வருடங்களுக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைக்க முடியும். ஐ.தே. கட்சி கடந்த 25 வருடங்களாக மாகாண சபையை காலி மாவட்டத்தில் வெற்றி கொண்டதில்லை. எதிர்வரும் தேர்தலில் அதனை வெற்றிகொண்டு ஆட்சி அமைப்போம் என்றார்.  

இதில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, விஜயபால ஹெட்டிஆராச்சி, பன்துலால் பண்டாரிகொட ஆகியோர் கலந்து கொண்டனர். 

(வெலிகம தினகரன் நிருபர்)    

Wed, 02/06/2019 - 13:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை