ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசை

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையில் ஆவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைக் கடந்து 2ம் இடம் சென்றுள்ளார். மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6ம் இடத்தில் இருக்கிறார்.

பாட் கமின்ஸ், முதலிடத்திலுள்ள ரபாடாவைக் பார்க்கிலும் தற்போது 4புள்ளிகள் தான் குறைவாக உள்ளார்.

விரைவில் ரபாடாவையும் முன்னோக்கிசெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக  கான்பெராவில் 10விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் 10இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார்.

மே.இ.தீவுகளின் கிமார் ரோச் 12ம் இடத்துக்கும் ஷனன் கேப்ரியல் 11ம் இடத்திலும் உள்ளனர்.

முதல் 5பந்துவீச்சாளர்கள்

1.ரபாடா (882புள்ளிகள்)

2.பாட் கமின்ஸ் (878புள்ளிகள்)

3.ஆண்டர்சன் (860புள்ளிகள்)

4.வெர்னன் பிலாண்டர் (809புள்ளிகள்)

5.ரவீந்திர ஜடேஜா (794 புள்ளிகள்)

Thu, 02/07/2019 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை