முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அரசு மீள கட்டியெழுப்பியுள்ளது

அக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் சிக்கலையடுத்து ஏற்பட்டிருந்த பாதிப்பை அரசாங்கம் திருத்தியுள்ளது. அதனால் இப்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப எம்மால் முடிந்திருக்கிறது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களில் இருந்ததைவிட இப்போது நாம் முதலீட்டார்கள் நம்பிக்கையை கட்டியெழுப்பியுள்ளோம். எமது வெளிநாட்டு கடன் வழங்கல் தகுதியை இது ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் கடனாக வாங்க முடியும். இது எமக்கு 10.8 மில்லியன் ரூபா சேமிப்பை ஏற்படுத்துகிறது என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த ‘Break fast Bugg’ நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய போதே நிதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அரசாங்க பிணையங்கள் மூலம் 8 பில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது. ரூபாவின் விகிதம் 2.3 சத வீதத்தால் அதிகரித்துள்ளது. எனவே அக்டோபர் 26 சிக்கலின் பாதிப்பு திருத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை