விவாதங்கள் எதிலும் பங்கேற்காத எம்.பிக்களின் தகவல் அம்பலம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் கடந்த ஆண்டு பாராளுமன்ற விவாதங்கள் எவற்றிலும் பங்குகொள்ளவில்லை என ‘manthri.lk’ என்ற, இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

பாராளுமன்றத்தின் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையான ஹன்சார்ட் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  

 

 

இவ்வாறு விவாதங்கள் எவற்றிலும் கலந்து கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களில் பன்னிரண்டு பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள். ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்கவின் பெயரும் இந்தப்பட்டியலில் உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சரத் அமுனுகம, லக்‌ஷ்மன் செனவிரத்ன, லக்ஷ்மன் வசந்த பெரேரா, அங்கஜன் இராமநாதன், லொஹான் ரத்வத்த, சிறிபால கம்லத், ஜனக பண்டார தென்னக்கோன், ஆறுமுகன் தொண்டமான், தேனுக விதானகமகே மற்றும் துலிப் விஜேசேகர ஆகியோரின் பெயர்களே ‘manthri.lk’ யின் பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேவேளை செப்டம்பர் 15,  2018முதல் டிசம்பர் 2018வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் 1,150அறிக்கைகள், ஹன்சார்டிலிருந்து சபாநாயகரின் உத்தரவின் பேரில் அழிக்கப் பட்டதாகவும் ‘manthri.lk’ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wed, 02/27/2019 - 08:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை