இந்திய-பாகிஸ்தான் பதற்றம்; இலங்கை கடும் கவலை

பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுமாறு இரு நாடுகளுக்கும் வலியுறுத்து

காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமாவில் இந்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  

பயங்கரவாதத்தின் தீவிரத்தை மூன்று தசாப்த காலம் இலங்கை அனுபவித்துள்ளது. இந்த வகையில் புல்வாமா தாக்குதலின் உணர்வுகளை இலங்கையால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தாக்குதலுக்கு இலங்கை கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சகல நடவடிக்கைகளுக்கும் இலங்கை ஆதரவளிக்கும். 

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திர நிலையும் நிகழ வேண்டும் என்பதே இலங்கையின் விருப்பம். அத்துடன் பதற்ற சூழலைத் தணிப்பதற்கு பேச்சுவார்த்தை மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே முறையான அணுகு முறைகளாகும். 

இந்த வகையில் முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தை உறுதிப்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும்இணக்கப்பாடு,புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Thu, 02/28/2019 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை