உள்ளக காற்றின் தரத்தை மேம்படுத்த வழிகாட்டல்

மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை 

உள்ளக காற்றின் தரத்தை மேம்படுத்தும் வழிகாட்டல் தொகுதியொன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை வகுக்கவுள்ளது. 

உள்ளகக் காற்றி்ன் தரத்தை மேம்படுத்துவதற்காக 2019-2021வரையிலான மூன்றாண்டு கால முன்னோடி திட்டமொன்றுக்கான மைய ஆய்வை மேற்கொண்டு வழிகாட்டல் தொகுதியொன்றை வகுக்க மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது. 

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்தார் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பரிசோதனை கூட சேவையின் பிரதி பணிப்பாளர் ஷிரந்தி ஜான்ஸ் கூறினார். 

மேற்படி மைய ஆய்வுக்கான பரிசோதனைகள் இடையிடையே தெரிவு செய்யப்படும் பாடசாலைகள் வைத்தியசாலைகள், அரசாங்க கட்டடங்கள், அலுவலக கட்டடங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்படும் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த பரிசோதனைகள் 6 மாத காலத்தில் முழுமைபெறும் என்று குறிப்பிட்ட அவர் முன்னர் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பி்ட்டார். 

Wed, 02/20/2019 - 11:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை