கடல் எல்லை கணிப்பிட வந்த 'ஜமுனா' நாடு திரும்பியது

Rizwan Segu Mohideen
கடல் எல்லை கணிப்பிட வந்த 'ஜமுனா' நாடு திரும்பியது-Indian Naval Ship 'Jamuna' Departs the Island

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘ஜமுனா’ கப்பல் மீண்டும் அந்நாட்டுக்கு திரும்பியுள்ளது.

இலங்கை கடல் எல்லையை வரைபடமாக்கும் ஒன்றிணைந்த நடவடிக்கைக்காக, கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த, ‘ஜமுனா’ கப்பல், தனது பணியை நிறைவு செய்து, கொழும்பு துறைமுகத்திலிருந்து  இன்று (06) புறப்பட்டதாக கடற்படை பேச்சாளர் சூரிய பண்டார தெரிவித்தார்.

கடல் எல்லை கணிப்பிட வந்த 'ஜமுனா' நாடு திரும்பியது-Indian Naval Ship 'Jamuna' Departs the Island

இதன்போது, இலங்கை கடற்படையினால், கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய பிரியாவிடை அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், குறித்த கப்பல் இலங்கை கடல் எல்லையில் தரித்திருந்த காலப்பகுதியில், இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியன ஒன்றிணைந்து, கொழும்பிலிருந்து காலி வரையிலான கடல் எல்லையை உள்ளடக்கிய வரைபடமாக்கல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொன்டுள்ளதுடன், இலங்கை கடற்படையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு நிகவுகளிலும் பங்குபற்றியுள்ளது.

Wed, 02/06/2019 - 16:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை