ஐ.எஸ்ஸில் இணைந்த யுவதியின் பிரிட்டன் நாட்டு குடியுரிமை பறிப்பு

லண்டனில் இருந்து சென்று சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் இணைந்த ஷமிமா பேகம் என்ற பதின்ம வயது யுவதியின் பிரிட்டன் பிரஜா உரிமை பறிக்கப்படவுள்ளது.

பேகம் பிரஜா உரிமையை வைத்திருப்பதற்கு தகுதி இல்லை என்று பிரிட்டன் அரச தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

பாடசாலை மாணவியாக இருந்த பேகம் 2015 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த வாரம் சிரிய அகதி முகாமில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டார். ஐ.எஸ் குழுவின் கடைசி கட்டுப்பாட்டுபாட்டு பகுதியான பங்குஸ் கிராமத்தில் இருந்து வெளியேறி அந்த முகாமில் அவர் அடைக்கலம் பெற்றுள்ளார்.

வார இறுதியில் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்திருக்கும் அவர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து ஷமிமா பேகத்தின் தாயாருக்கு கடிதம் வந்ததாகவும், அதில் ஷமிமா மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது.

இந்த முடிவுக்கு அதிர்ச்சி மற்றும் கவலை அடைவதாக குறிப்பிட்டிருக்கும் அவர் தனது கணவரின் நாடான நெதர்தலாந்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை