சுங்கத் திணைக்கள வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானம்

ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ இதுவரை தமது கோரிக்கை தொடர்பில் எதுவித முடிவும் அறிவிக்காத நிலையில் தற்போது முன்னெடுத்துவரும் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதா? அல்லது இதே வலுவுடன் முன்னெடுப்பதா? என்பது பற்றி சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று(04)தீர்மானிக்கவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வருண சமீர நேற்றுத் தெரிவித்தார்.  

துறைமுகத்தில் நாளாந்தம் சுமார் 1,500கொள்கலன்கள்ஏற்றி இறக்கப்படுகிறது. ஆனால் தொழிங்சங்கநடவடிக்கையால் சுமார் 500கொள்கலன்களே ஏற்றி இறக்கப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் அரசுக்கு நட்டம் ஏற்படுகிறது.  

எமது நியாயமான கோரிக்கைதொடர்பில் ஜனாதிபதியோ, பிரதமரோ, நிதி அமைச்சரோ பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.  

இதேவேளை, அரசாங்கத்திடமிருந்து தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் அதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் எனவும் சுங்கத் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டியவும் தெரிவித்துள்ளார்.  

 எனினும், அத்தியாவசியப் பொருட்கள், பழுதடையக்கூடிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்   எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.(ஸ)

Mon, 02/04/2019 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை