மாவட்ட செயலக கட்டமைப்பை மறுசீரமைப்பது அவசியம்

மாவட்ட செயலகத்தின் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் புதிய ஜனநாயக அடிச்சட்டம் ஆளுமையை வலுப்படுத்த வேண்டியதுடன் நாடு மேலும் கடன் சுமையில் விழக்கூடாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

சிட்ரா சமூக புத்தாக்க பரிசோதனை கூடத்தை நேற்று திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறினார். நிர்வாகத்தின் அடிப்படை அலகு முன்னர் அரசாங்க அதிபர் மற்றும் மாகாணம் என்றுதான் இருந்தது. இது குறிப்பாக யுத்த காலத்தின் போதும் நன்றாக செயற்பட்டது. எனினும் மாவட்ட ரீதியாக பிரிக்கப்பட்ட பின்னர் வேலைகள் அதிகரித்துவிட்டன. இப்போது மாவட்ட செயலகம் அதிக வேலைப்பளுவையும் அதிக ஊழியர்களையும் கொண்டுள்ளது. எனவே அதன் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை