கிழக்கு மாகாணத்தில் வறிய மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகை நிதி

கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையின் பராமரிப்புச் செலவுக்கு ஒதுக்கப்படும் நிதியினை கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தீர்மானித்துள்ளார்.  

கிழக்கு ஆளுநரின் மாளிகையை பராமரிப்பு செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் இருபது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதியினை உடனடியாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தந்தையை இழந்த அடிப்படை வசதிகளின்றி வாழுகின்ற ஐந்தாம் தரம் வரையுள்ள ஏழை மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் வீதம் வழங்குவதற்கு ஆளுநரினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கபப்ட்டுள்ளது.  

இது தொடர்பாக நேற்றுக் காலை கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற மாகாண நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு, கல்வி அமைச்சு, சமூக சேவைகள் திணைக்கள உட்பட உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்படி உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.  

கிழக்கு மாகாணத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையை இழந்து வருமானமற்று இருக்கின்ற நிலையை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அண்மையில் வாகரை பிரதேசத்தில் சிறிய மாணவர்கள் நிலக்கடலை போன்ற பொருட்களை விற்று தங்களின் ஜீவனோபாயத்தை நடத்துவதாக சமூக வலைத்ளத்தில் செய்திகள் வெளிவந்தன.  

மேலும் பல்வேறுபட்ட பிரதேசங்களில் ஐந்தாம் ஆண்டுவரை படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறான எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் தங்களுடைய கல்வியை தொடரமுடியாதுள்ளதை ஆளுநரின் கவனத்திற்குட்படுத்தப்பட்டதையடுத்து இந்த புத்தாக்க செயல்திட்ட நடைமுறையை உடன் அமுலுக்கும் வரும் வகையில் முதன் முதலில் கிழக்கு ஆளுநர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

கிண்ணியா மத்திய, கந்தளாய் தினகரன் நிருபர்கள்  

Fri, 02/08/2019 - 09:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை