சிட்ரா சமூக புத்தாக்க ஆய்வுகூடம் திறந்துவைப்பு

சிட்ரா சமூக புத்தாக்க ஆய்வுகூடம் திறந்துவைப்பு-Prime Minister Ranil Wickremesinghe officially launches Citra, Sri Lanka’s first Social Innovation Lab
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சியினால் (UNDP) இணைந்து வடிவமைக்கப்பட்ட 'சிட்ரா' (CITRA) சமூக புத்தாக்க ஆய்வுகூடத்தை இன்று (13)  கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்ததார்.

2018 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட் சிட்ரா சமூக புத்தாக்க ஆய்வுகூடத்தின் மூலம் வடிவமைப்பு அணுகுமுறைகள் போன்ற நிபுணத்துவ தொலைநோக்குப் பார்வை மற்றும் புத்தாக்கக் கருவிகளினூடாக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு, பொதுத்துறையின் ஆற்றல்களைக் கட்டியெழுப்புவதற்கு மற்றும் பொதுச்சேவை விநியோகத்தை மீளமைப்பதற்கு சிட்ரா பணியாற்றுகின்றனது. மேலும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் இணைந்ததாகப் பணியாற்றும் இந்த புத்தாக்க ஆய்வுகூடம், அபிவிருத்தித் தீர்வுகளை உருவாக்கி குடிமக்களின் ஈடுபாட்டைக் கொண்டுவருவதை நோக்கிப் பயணிக்கின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், 'சிட்ரா சமூக புத்தாக்க ஆய்வு மையமானது ஆரம்பிக்கபபட்ட ஒரு வருட காலத்திற்குள் தமது நிகழ்ச்சிகளை நடத்திய முறை, வெவ்வேறு அமைச்சுக்களுடன் ஏற்படுத்திய பங்காளித்துவம் மற்றும் சமூக புத்தாக்கத்துடன் ஈடுபட்ட மற்றும் உள்ளடக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் பெரும் வளர்ச்சியை காண்பித்துள்ளது' என்றார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, 'அரசாங்கத்திற்குள் சிட்ரா சமூக புத்தாக்க ஆய்வுகூடத்திற்கான ஒரு நங்கூரமாக இருப்பதில் அமைச்சு பெருமை அடைவதுடன், இந்த ஆய்வுகூடம் நாட்டிற்காகவும் அமைச்சின் சார்பிலும் முன்னெடுக்கும் செயற்பாடு பெறுமதியானதாகும். மேலும் நாட்டின் தேவைகளுக்கு வினைத்திறன் மிக்க தீர்வுகளை வழங்குவதற்கு  சிட்ராவுக்கான எமது ஒத்துழைப்பை தொடர்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார்.  

Wed, 02/13/2019 - 17:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை