தொழிற் பயிற்சி அதிகார சபை தலைவர் ரவி ஜயவர்தன கடமையேற்பு

தொழிற்பயிற்சி அதிகார சபை தலைவர் ரவி ஜயவர்தன கடமையேற்பு-Vocational Training Center New Chairman Assumes Duty

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவராக, சட்டத்தரணி ரவி ஜயவர்தன தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள பிரதான காரியாலயத்தில் வைத்து, அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் அவர் தலைவராக செயற்பட்டுள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்று கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் எனும் வகையில் இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு சர்வதேச தரத்திலான உரிய தொழில் திறனை வழங்குவதற்கும், அதன்மூலம் வேலைவாய்ப்பின்மையை நீக்கி நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், தகுதி வாய்ந்த தொழில் பயிற்சியாளர்களை உருவாக்குவது தொடர்பில் சிறந்த மற்றும் உயர் தரமான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவிதானகே தொழிற்பயிற்சி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Wed, 02/20/2019 - 17:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை