புனித ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்று அன்பளிப்பாக அனுப்பி வைப்பு

தாய்லாந்தின் பத்தாவது அரசராக முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அரச மரக்கன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா,நேற்று (19) தாய்லாந்து சென்று இளவரசருக்கு ஜனாதிபதியின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் பரிசான, அரச மரக்கன்றையும் இளவரசரிடம் கையளித்தார்.இவர் எதிர்வரும் மே மாதம் தாய்லாந்தின் பத்தாவது அரசராக முடிசூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து, இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுவூட்டும் வகையிலும் தேரவாத புத்த தர்மத்தை பாதுகாப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சிறப்பு நிகழ்வாக இது அமைந்திருந்தது.

முடி சூடவுள்ள தாய்லாந்து இளவரசருக்கு இராஜதந்திர ரீதியில் கிடைத்த முதல் பரிசு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து அயோத்யா நகரில் அமைந்துள்ள வஜிரதம்மாராம விகாரையில் இந்த அரச மரக்கன்று நடப்பட்டது.

இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துடன் அனுப்பி வைக்கப்பட்ட இந்த மகத்துவம் வாய்ந்த பரிசானது, இரு நாடுகளுக்கிடையிலான நட்பின் அடையாளமென தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை