சமபோஷ கிண்ணம்; அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டம்

சமபோஷ நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் அகில இலங்கை ரீதியான பாடசாலைகளுக்கு இடையே 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இடையே நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 05, 06, 07,08ம் திகதிகளில் கோட்டை மொரகஸ்முல்ல சாலிந்த ரணவக்க பொது விளையாட்டு மைதானம். ராஜகிரிய,நாவல,சேனநாயக்க பொது விளையாட்டு மைதானம்,அட்டம்பிட்டிய பொது விளையாட்டு மைதானம், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் குதிரைப் பந்தய விளையாட்டு மைதானங்களில் நடைபெற்றன.

அகில இலங்கை ரீதியாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியினர் யாழ் இளவாலைசென் ஹென்றிஸ் கல்லூரியினை (2--0) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டுசம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட பொலண்ணறுவ பெந்திவெவ மகா வித்தியாலய அணியினர் பொல்கஹவெல பராக்கிரம பாகு தேசிய பாடசாலைஅணியினரை (08- - 07) என்ற தண்டனை உதை மூலம் வெற்றி கொண்டு சம்பயின் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

பரிசளிப்பு விழாவின் போது இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஹேமெந்த அபயகோன்,செயலாளர் என். எஸ்.பி. திசாநாயக்க,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வா,கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

(கல்முனை சுழற்சி நிருபர்)

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை