உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் சம்பியன்

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தலைமையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் (24 ம் திகதி ) இறுதிப்போட்டி நடைபெற்றது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 14 கழகங்கள் இச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் அரை இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்திற்கும் சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற இப்போட்டியில் சோபர் கழகம் 3 கோல்களைப் புகுத்தி 3 : 0 என்ற ரீதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

மற்றைய அரை இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்திற்கும் ஒலுவில் கிறசண்ட் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.இதில் ஒலுவில் கிறசண்ட் கழக அணி 3 : 1 என்ற ரீதியில் கோல்களைப்புகுத்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டது.

இறுதிப்போட்டி அட்டாளைச்சேனை சோபர் கழகத்திற்கும் ஒலுவில் கிறசண்ட் கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.இதில் சோபர் அணி 2 கோல்களைப்புகுத்தி 2:0 என்ற ரீதியில் வெற்றி பெற்றுக் கொண்டது.

இவ்வாண்டுக்கான அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கதையும்,இரண்டாமிடம் பெற்ற ஒலுவில் கிறசண்ட் அணியினர் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்.

நடைறெவுள்ள பிரதேச செயலகங்களுக்கிடையிலான அம்பாறை மாவட்ட மட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகம் சார்பாக இக்கழக வீரர்கள் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை