'மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எந்தவித அறிவிப்பும் கிடையாது'

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ நடத்தத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, ஊடக சந்திப்புக்களில் தேர்தலை நடத்துமாறு கோருவது அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே  என, காலி மாவட்ட பாராளுமன் உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.  

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், "அரசாங்கம் என்ற வகையில் நாம் எந்தத் தேர்தலுக்கும் முகம் கொடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால், அவசியமான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை இந்த முறையிலேயே நடத்த வேண்டுமென சட்டங்களை வகுத்து செயற்பட்டது  இந்த அரசாங்கம் அல்ல. கடந்த அரசாங்கத்தில் இருந்த எல்லாக் குழுக்களுமே அதனை மேற்கொண்டது. தேர்தலை ஆசன முறைப்படி நடத்தும்படி கோரினர். அதன் படியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை நிறுத்திவிட்டு நாம் பழைய முறையில் நடத்த வேண்டியுள்ளது. பழைய முறையில் சரி தேர்தலை நடத்த நாம் தயாராக உள்ளோம். அதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் தேவை. எல்லாக் கட்சிகளும் இணங்கினால், அதனைச் செய்ய முடியும். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சம்மதத்தைப் பெற்று இதனைச் செய்ய முடியும். அதனை விடுத்து மேடைகளில் தேர்தல் தேவையெனக் கூக்குரல் இடுவது அர்த்தம் இல்லை. முதலில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்" என்றார்.  

(வெலிகம தினகரன் நிருபர் )

Wed, 02/27/2019 - 08:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை