மக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை

  
மக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.   
 
யாருக்கும் புரியாத விலைச்சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப் படுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு எந்தத் தெளிவும் கிடையாது. ஒக்டோபர் மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ மாற்றமான கொள்கையையே பின்பற்றினார். அவர் எந்த விலைச் சூத்திர த்தையும் பின்பற்றாமல் மூன்று தடவைகள் எரிபொருள் விலைகளை குறைத்தார். எனவே விலைச்சூத்திரமொன்று நாட்டுக்குத் தேவையில்லை.   
 
நடைமுறைச்சாத்தியமான முறையே அவசியம். உலகினதும் நாட்டினதும் பொருளாதார நிலைமைகளை அவர் நன்கு அறிந்தவர் என்பதால் அவருக்கு மூன்று தடவைகள் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த அரசாங்கம் மக்களுக்கு பாதகமானவற்றையே செய்கிறது. வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பால் தன்னிச்சையாக வரி ஏற்றப்படுகிறது. வெற் வரி அறிமுகப் படுத்தப்பட்டபோது நாம் நீதிமன்றம் சென்றோம். தேசிய அரசாங்கம் என்ற  போர்வையில் அமைச்சரவையை அதிகரித்து மக்கள் மீது சுமையேற்ற அரசு முயல்வதாகவும் அவர் கூறினார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.(பா)   
Wed, 02/13/2019 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை