உலகின் மிகச்சிறிய ஆண் குழந்தை வீடு சென்றது

உலகின் மிகச்சிறிய ஆண் குழந்தை என நம்பப்படும் வெறுமனே 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்று ஜப்பான் மருத்துவமனையில் இருந்து வீடு சென்றுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் அவசர சி பிரிவில் பிறந்த இந்தக் குழந்தை உள்ளங்கைக்குள் பொருந்தும் அளவு சிறியதாக இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தக் குழந்தை கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது.

தற்போது 3.2 கிலோகிராம் எடை அளவு வளர்ந்திருக்கும் இந்தக் குழுந்தை சாதாரணமாக உணவு உட்கொள்கிறது. 24 மாதங்களில் பிறந்த சிறிய குழந்தை ஐந்து மாதங்கள் மருத்துவமனையில் செலவிட்டுள்ளது.

“அவன் இவ்வளவு பெரிதாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, ஏனென்றால் அவன் உயிர் தப்புவான் என்று நான் உண்மையில் நம்பவில்லை” என்று அந்தக் குழந்தையின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜெர்மனியில் 274 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையே மிகச்சிறிய ஆண் குழந்தை என சாதனை படைத்திருந்தது. உயிர்பிழைத்த மிகச்சிறிய பெண் குழந்தையும் ஜெர்மனியிலேயே பிறந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அந்தக் குழுந்தை 252 கிராமுடன் பிறந்தது.

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை