நியூசிலாந்து அணிக்கு தொடர் வெற்றி

பங்களாதேஷுக்கு எதிராக நடைபெற்ற 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2–0 என கைப்பற்றியது. 

இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்தது. 

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 49.4 ஓவர்களில் 226 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மொஹமது மிதுன் 57, சபீர் ரஹ்மான் 43 ஓட்டங்களை எடுத்தனர். மற்ற அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து. தரப்பில் பெர்குஸன் 3, டொட் ஆஸ்ட்லே, நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 227 ஓட்டங்்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சார்பில் மார்ட்டின் கப்டில், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை கையாண்டனர்.  

ஹென்றி நிக்கோல்ஸ் 14 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

4 சிக்ஸர், 14 பவுண்டரியுடன் 88 பந்துகளில் 118 ஓட்டங்களை விளாசினார் கப்டில். கேன் வில்லியம்ஸன் 65 ஓட்டங்களுடனும், ரொஸ் டெய்லர் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 36.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 229 ஓட்டங்களை எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.  

இதன் மூலம் தொடரையும் 2–0 என கைப்பற்றியது. மார்ட்டின் கப்டில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.     

Mon, 02/18/2019 - 14:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை