மல்வத்துஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்

மல்வத்துஓயா நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கென, புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான நில அளவை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பீ. ஹரிசன், காணிகள் மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் வேண்டுகோள் விடுத்தார்.  

மஹவிலச்சிய பகுதியில் இடம்பெற்ற காணிகளுக்கு உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவின் மெதவச்சிஎலிய, தொடம்வில, ருவன்மடுவ, பெதிவெவ, ரஸ்மிகவெவ, பில்லேவ, மஹதன்கஸ்வெவ, ஹேரத்கம, கிம்புல்வெவ, தியமதுராவ போன்ற கிராமங்களும் மத்திய நுவரகம் பிரதேச செயலாளர் பிரிவின் குடாஹல்மல்லேவ, கொக்எம்பே போன்ற கிராமங்களும் நீரில்  மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.  இதனால், இங்குள்ள மக்களை வெளியேற்றி புதிய வீடுகளில் இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். \

இவர்களுக்கான வீடுகள் மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான களுவில மற்றும் நாரம்வில  பிரதேசங்களில்  அமைக்கப்படவுள்ளன. இதற்கென ஒரு  குடும்பத்துக்கு அரை ஏக்கர் காணி வழங்கப்படவுள்ளது.

Sat, 02/23/2019 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை