'அடிமட்ட மக்களை மறந்தே கடந்த ஆட்சியாளர்கள் செயற்பட்டார்கள்'

சூரியவெவ பிரதேச கூட்டத்தில் அமைச்சர் சஜித்

நாட்டில் இருந்த அன்றைய ஆட்சியாளர்கள்  தமது பயணங்களை  விமானம் மூலம் மேற்கொண்டதனால்,  நிலத்தில் வாழ்ந்த மக்களது தேவைகளைக் கண்டுகொள்ளவில்லை. தம்மை சிம்மாசனத்திற்கு அனுப்பிய மக்களை மறந்தே செயற்பட்டார்கள் என   வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சா சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

சூரியவெவ நகரை மஹவெலிகட  மற்றும் சூழவுள்ள கிராமங்களோடு இணைப்பதற்கான 331இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சா சஜித் பிரேமதாஸ இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், "அன்றைய தலைவர்களும் ஆட்சியாளர்களும்  இந்த சூரியவெவ மக்களது கஷ்டங்களை அன்று அறிந்திருப்பார்களேயானால், நான் இன்று இந்த மக்களுக்கு பாலத்திற்கான அடிக்கல்லினை நட்டிவைக்க வேண்டிய எவ்வித தேவையும் ஏற்பட்டிருக்காது.  

இந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டில் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தவர் சேவை செய்திருந்தால்,   இந்த மாவட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இருந்திருக்க முடியாது. இருந்தாலும், என்ன ஆச்சரியம் என்றால் இரண்டு தடவைகள் ஜனாதிபதியைjத் தெரிவுசெய்த மக்களில் மலசலகூடங்கள் மற்றும் வீடுகள்  இல்லாமல் எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன?

அரச குடும்பத்தினர்கள் அன்று மேலால் மாத்திரம் சென்றதினால், அவர்களது  கீழ் வாழ்ந்த இந்த மக்களது தேவைகளைக் கண்டுகொள்ளவில்லை.

தற்பொழுது எனது அமைச்சிலிருந்த மாத்திரம் மாவட்டமெங்கும் 24 கிராமியப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 25ஆவது பாலத்திற்கே   இன்று அடிக்கல் நட்டி வைத்தேன். இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்காக வழங்குவோம்.

நான் அன்று முதல் இன்றுவரை ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களுக்காக வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளேன். இத்தோடு சூரியவெவ வைத்தியசாலையின் குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும்.  

இன்று எமது எதிர்த்தரப்பினருக்கு நாம் நாடு பூராகவும் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை பார்த்துக்கொண்டு இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அன்று அவர்களால் செய்ய முடியாது போனவற்றை நாம் இன்று எமது நல்லாட்சி அரசாங்கத்தினூடாக முன்னெடுத்து வருகின்றோம்.

இங்கு நாளாந்தம் உதாகம கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்படுவதோடு, புதிய கிராமங்களுக்கான அடிக்கல்லும் நடப்பட்டு வருகின்றதினால், இதற்கு எதிராகச் சேறு பூசுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்" என்றார்.

(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர் )

Wed, 02/27/2019 - 08:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை