மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையங்கள் சோதனை

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் 

மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் பல மாநகர முதல்வரின் பணிப்பின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. 

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களே  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. 

ஆண், பெண் மாணவர்களுக்கான தனியான மலசல கூட வசதிகள் சுத்தமான குடிநீர் வசதிகள், கற்பித்தல் நடைபெறும் இடத்தில் போதுமான காற்றோட்டம், வெளிச்சம், இருக்கை வசதிகள், முறையான கழிவகற்றல், முகாமைத்துவம், மாணவர்களுக்கான வாகன தரிப்பிட ஏற்பாடுகள் மற்றும் கட்டண ஒழுங்குகள் என பல விடயங்கள் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டன. 

கடந்த வருடம் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில்  சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்யக் கூடிய வகையில் கல்வி நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Wed, 02/06/2019 - 11:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை