பேச்சுவார்த்தையில் இழுபறி: அமெரிக்காவில் மீண்டுமொரு அரச முடக்கத்திற்கு வாய்ப்பு

அமெரிக்காவில் அரசாங்கத் துறைகள் மீண்டும் முடக்கம் காண்பதைத் தடுப்பதற்கான முக்கியப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என குடியரசுக் கட்சியின் மூத்த பேச்சுவார்த்தையாளர் ரிச்சர்ட் ஷெல்பி கூறியுள்ளார்.

குடியேற்றம் தொடர்பான விவகாரத்தில் தரப்புகளுக்கு இடையில் இணக்கம் காணப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோ உடனான எல்லைப் பகுதியில் சுவர் ஒன்றை எழுப்ப பல பில்லியன் டொலர் நிதியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரி வருகிறார். அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

அந்தக் காரணத்தால், அரசாங்கத்தின் சில துறைகள் 35 நாட்களுக்கு முடக்கம் கண்டிருந்தன. கடந்த மாத இறுதியில் அவை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பின.

அந்த நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க, வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படவேண்டும்.

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை