வருகைதரு வீசாக்கள் பல நாடுகளுக்கு விஸ்தரிப்பு

தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளுட்பட சில நாடுகளுக்கு ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகக்கூடிய விமான நிலையத்தில் வழங்கப்படும் வருகை தரு வீசாக்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.  

தற்போது இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஒருமாதகால வருகை தரு வீசா வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.   இதேபோன்று தாய்லாந்திலிருந்து வரும் பயணிகளுக்கும் வருகை தரு வீசா வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு தாய்லாந்துக்கு மட்டுமல்ல ஜப்பான், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளுட்பட முக்கியமான நாடுகளை உள்வாங்கி அவற்றுக்கும் வருகை தரு வீசாவை வழங்க வேண்டுமென குறிப்பிட்டார்.  இந்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதோடு, வீசாவுக்கான காலத்தை ஆறு மாதங்களாக மட்டுப்படுத்தவும்  தீர்மானித்துள்ளது.  

(எம். ஏ. எம். நிலாம்)

Wed, 02/27/2019 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை