குற்றவாளிகளை வீரர்களாக காட்டும் முயற்சிகளை சில ஊடகங்கள் கைவிட வேண்டும்

குற்றவாளிகளை சில ஊடககங்களில் வீரர்களாகக் காட்ட முனைவதால் இளைஞர்களும் குற்றங்களில் ஈடுபடத் தூண்டப்படுவதாக எதிரக்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

லுனுகம்வெஹெரை மீன்பிடிக் கிராமத்தில் மஹிந்தராமை விகாரையில் (24) இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றும்  போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்ததாவது: குற்றவாளிகளை வீரர்களாகக் காண்பிக்கும் முயற்சிகளை சில ஊடகங்கள் கைவிட வேண்டும். இவ்வாறான முயற்சிகள் இளைஞர்கள் தப்பான வழிகளுக்கு அழைத்துச் செல்கிறது.1970ஆம் ஆண்டு முதல் நான் பாராளுமன்றத்தில் உள்ளேன்.

பாராளுமன்றத்தில் அன்றிருந்த நிலைமைகள்  இன்று இல்லை.உறுப்பினர்களுக்கு களங்கம் ஏற்படுத்தல்,சேறுபூசல் என்பவை இன்று அதிகரித்துள்ளன.

சம்பிரதாயமாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்து விடை கூற முடியாத ஒருவர் தொடர்பாக கதைப்பதில்லை.இந்த சம்பிரதாயம் இன்று அழிந்து போயுள்ளது.பாராளுமன்றத்தை முன்னுதாரணமானதாக்  கட்டியெழுப்பவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 யுத்தத்தைத் தோற்கடித்து அச்சமின்றி வாழக் கூடிய சூழலை மக்களுக்கு நாம்   ஏற்படுத்தினோம். நாம் அச்சத்திற்கு மத்தியில் வாழ்ந்த மக்கள்.அன்று நாம் அச்சத்தில் வாழ்ந்தமை இன்று இளைஞர்களுக்கும் தாய் தந்தையர்களுக்கும் மறந்து போயுள்ளது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து  நாட்டின் சகல பகுதிகளுக்கும் சுதந்திரமாக அச்சமின்றி செல்லும் சூழலை நாமே ஏற்படுத்தினோம். யாழ்ப்பாணத்திற்கு செல்லவும் அங்கிருந்து இங்கு வந்து வியாபாரத்தில் ஈடுபடவும், இதனால் வழியேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)

Tue, 02/26/2019 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை